அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்: இளைஞர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், துடியாண்டியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் அமனுல்லான் மகன் முகம்மது ஆசாத் (27). இவர் வன்னியம்பட்டி விலக்கு அருகே ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து
தற்போதைய செய்திகள்அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்: இளைஞர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், துடியாண்டியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் அமனுல்லான் மகன் முகம்மது ஆசாத் (27). இவர் வன்னியம்பட்டி விலக்கு அருகே ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், துடியாண்டியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் அமனுல்லான் மகன் முகம்மது ஆசாத் (27). இவர் வன்னியம்பட்டி விலக்கு அருகே ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமுற்ற முகம்மது ஆசாத், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கி.கடற்கரைசாமி (50) என்பவரைக் கைது செய்தனர்.