தற்போதைய செய்திகள்

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழா: 600 போலீஸார் பாதுகாப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 600 பேர் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 600 பேர் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடிவெள்ளிக்கிழமை திருவிழாவும் தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது ஆகும். இத்திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி, சனிக்கிழமை வரையில் நடைபெற இருக்கிறது. இதன் உச்சக்கட்ட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து டிராக்டர், மாட்டு வண்டிகள், லாரி மற்றும் வேன்  போன்ற வாகனங்களில் கூட்டம், கூட்டமாக வழிபாடு செய்து மாரியம்மனின் தரிசனம் பெறுவதற்காக வருவர். அதனால் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இத்திருக்கோயில் விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டுக்களை கட்டுப்படுத்தும் வகையில் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 டி.எஸ்.பிக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உள்ளனர். இதில், கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பெண்களிடம் நகை மற்றும் பணத்தை திருடுவதற்கு ஜேப்படி திருடர்கள் முயற்சி செய்வார்கள். இதை தடுக்கும் வகையில் பக்தர்கள் உடையில் ஆண், பெண் காவலர்கள் கண்காணிக்கவுள்ளனர்.

இந்தாண்டு முதல் திருக்கோயில் இருபுறமும் வெப்கேமரா பொறுத்தப்பட்டு கூட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் கணிப்பொறியின் மூலம் பார்வையிட்டு உடனே சம்பவங்கள் தடுக்கப்பட இருக்கிறது. அதேபோல், சாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் பக்தர்கள் அனைவரையும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகே அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவி்ததார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT