தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு காத்திருக்கிறது: தம்பிதுரை

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கரூர் மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை

ஏ. அருள்ராஜ்

தமிழகத்தின் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு காத்திருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கரூர் மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் வழக்குரைஞர் ராஜூ முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்று பேசியவர்கள், மக்களவை துணை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள மு.தம்பிதுரைக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் புகளூரில் தடுப்பணை கட்டவும், திருச்சி-கரூர்-கோவை சாலையை அகலப்படுத்தவும், நொய்யல் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் நடத்தப்படும் அனைத்து தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. சில திட்டங்கள் மத்திய அரசிடம் கொண்டு செல்லும்போது அவற்றை தேக்கமடையாமல் இருக்க தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் சாயப்பட்டறை கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் 900 சிறு, குறு சாயப்பட்டறைகளுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சுக்காலியூர்-காந்திகிராமம் சாலை  ரூ.14 கோடியில் அகலப்படுத்தப்படுகிறது. வீரராக்கியம் முதல் காந்திகிராமம் வரை ரூ.6 கோடியில் சீரமைக்கப்படுகிறது. வாங்கல்-மோகனூர் காவிரிபாலம் இணைப்புச் சாலையை சுற்றுவட்டச் சாலையில் இணைப்பதற்கு நிலம் ஆர்ஜிதப்பணிகள் முடிவடைந்துள்ளது என்றார்.

வாழ்த்து தெரிவித்த கூட்டமைப்பினருக்கு நன்றி தெரிவித்து மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேசுகையில், மக்களவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்கள்தான் அனைத்து அமைச்சர்களுடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தவர்கள். முதல்வரின் செயல்பாட்டினால் தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு காத்துக்கொண்டிருக்கிறது என்றார்.

 கூட்டத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் இயக்குநர் ஜனார்த்தனன் மற்றும் அனைத்து தொழில் கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT