தற்போதைய செய்திகள்

மனைவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியப் பயிற்றுநர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை நகையைக் கேட்டு அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியதாக அவரது கணவரான வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத்

Jeyakumar

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை நகையைக் கேட்டு அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியதாக அவரது கணவரான வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில், போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (28). இவருக்கும் சேசபுரம், ஆர்.சி.தெருவைச் சேர்ந்த அந்தோனி மகன் ராஜா (எ) மரியலூர்து என்பவருக்கும் ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜா (எ) மரியலூர்த்து, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள வட்டார வளமையத்தில் ஆசிரியப் பயிற்றுநராக வேலை செய்து வருகிறார். திருமணத்தின்போது 33 பவுன் நகை வரதட்சிணையாக கொடுக்கப்பட்டுள்ளது. சேசபுரத்தில் இவர்கள் குடியிருந்துள்ளார்கள். கலைச்செல்வி தனது நகைகளை வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்துள்ளார். ராஜா (எ) மரியலூர்த்து, நகைகளை எடுத்துத்தர வலியுறுத்தி தகராறு செய்து வந்துள்ளார். இறுதியாக நகைகையைக் கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு விரட்டிவிட்டாராம்.

இது குறித்து கலைச்செல்வி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜா (எ) மரியலூர்துவை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா கோலாகலம்

நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

தென்னை மரத்தில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழப்பு

பாமகவில் ராமதாஸ் வழிகாட்டி மட்டும்தான்: கே.பாலு

அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT