மாமியார் வீட்டில் மகன் தூக்கிட்டு தற்கொலை: சாவில் சந்தேகமென தந்தை புகார்
ஆம்பூர் அருகே மாமியார் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவருடைய தந்தை ஆம்பூர் தாலுகா
ஆம்பூர் அருகே மாமியார் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவருடைய தந்தை ஆம்பூர் தாலுகா போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்துள்ளார்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தை சேர்ந்த சம்பத் மகள் சத்யாவிற்கும் (22), திருப்பத்தூர் அருகே சமுத்திரம் கிராமம் மணி மகன் முருகனுக்கும் (25) சுமார் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு காரணமாக அண்மையில் சத்யா கணவருடன் கோபித்துக் கொண்டு விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். மனைவியை அழைத்து செல்வதற்காக திங்கள்கிழமை விண்ணமங்கலத்திற்கு முருகன் வந்துள்ளார். அப்போது முருகனுக்கும், சத்யாவின் உறவினர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சத்யாவின் தாய் வீட்டில் முருகன் தூக்கில் சடலமாக தொங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
Advertisement
இதுகுறித்து முருகனின் தந்தை மணி ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.