முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூரில் விபத்து இழப்பீடுத் தொகை வழங்காத அரசு பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீடு தொகை வழங்காத அரசு போக்குவரத்துக்கழக பேருந்தை கடலூர் நீதிமன்றம் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:33 AM
பகிர்:

விபத்து இழப்பீடு தொகை வழங்காத அரசு போக்குவரத்துக்கழக பேருந்தை கடலூர் நீதிமன்றம் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனர்.

சென்னையை சேர்ந்த சின்னதுரை வயது(40). இவர் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் அரசு விரைவு பேருந்தில் (SETC) 23.7.2005 அன்று சென்றுள்ளார். திருநாவலூர் அருகே செல்லும் போது லாரி மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில்

சின்னதுரைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சின்னதுரை இழப்பீடு கோரி கடலூர் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 16.7.2009 அன்று இழப்பீடாக ரூ.5,48,358 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையை வழங்காததால் மீண்டும் 10.6.2013 அன்று சின்னதுரை, வழக்குரைஞர்கள் மூலம் கடலூர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், போக்குவரத்துக்கழகம் இழப்பீடு தொகை வழங்காததால், அரசு பேருந்தை ஜப்தி செய்து இழப்பீடு தொகையை வட்டி சேர்த்து ரூ.8 லட்சத்து 900 ருபாயை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து கும்பகோணத்திலிருந்து சென்னை சென்ற அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஜப்தி செய்து கடலூர் நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் சிவமணி, முகுந்தன், சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.