மின்சாரம் பாய்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் மரணம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மின்சாரம் பாய்ந்து தீட்சிதர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மின்சாரம் பாய்ந்து தீட்சிதர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த கீர்த்திவாச தீட்சிதர் (45). இவர் நடராஜர் கோயிலில் கொடிமரம் அருகே உள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி சந்திதியில் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் கோயிலில் உள்ள மின்விளக்குகளை அணைத்துக் கொண்டு வந்தார்.
அப்போது கொடிமரம் அருகே உள்ள மின்சார ஸ்விட்சை அணைக்கும் போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை சக தீட்சிதர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கீர்த்திவாச தீட்சிதர் திங்கள்கிழமை காலை இறந்தார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.