முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர், விருத்தாசலம் நகரசபை தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம் நகரசபை தலைவர் பதவி உள்ள மாவட்டத்தில் காலியக உள்ள உள்ளாட்சி பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம் நகரசபை தலைவர் பதவி உள்ள மாவட்டத்தில் காலியக உள்ள உள்ளாட்சி பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை தயார் செய்யுமாறு தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் செப்.18-ம் தேதி நடத்தப்போவதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து காலியாக உள்ள கடலூர், விருத்தாசலம் நகராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிக்கான தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு, தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி 4-9-2014. மனு வாபஸ் பெறும் தேதி 8-9-2014 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் நகராட்சி ஆணையாளர் காளிமுத்து கடந்த சனிக்கிழமை நடைபயிற்சி செல்லும் போது மர்மநபர்களால் தாக்கப்பட்டு கால், கை முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கண்டித்து நகராட்சி அலுவலர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கடலூர் நகரசபை தலைவராக இருந்த அதிமுகவைச் சி.கே.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். நகராட்சி தலைவர் பதவியிடம் காலியானதால், துணைத்தலைவர் பதவி வகிக்கும் ஜி.ஜே.குமார், நகரசபை தலைவர் பொறுப்பேற்று கவனித்து வருகிறார். அதேபோன்று 42 வது வார்டு உறுப்பினர் சிறைதண்டனை பெற்றதால் பதவிநீக்கம் செய்யப்பட்ட வார்டு கவுன்சிலர் பதவியும் காலியாக உள்ளது.

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள விருத்தாசலம் நகரமன்றத் தலைவர் பதவி மற்றும் கடலூர் நகரமன்றத் தலைவர் பதவி, கடலூர் நகராட்சி 42-வது வார்டு கவுன்சிலர் பதவி உள்ளிட்ட காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களை நியமிக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடலூர் மற்றும் விருத்தாசலம் நகராட்சியில் வார்டு, வாரியாக வாக்காளர் பட்டியலை தயார் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம் நகராட்சி அலுவலகங்களுக்கு புதன்கிழமை இ-மெயில் மூலம் அவசர உத்தரவு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கடும் போட்டி: கடலூர், விருத்தாசலம் நகரமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் கடும் போட்டி நிலவுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி நிர்வாகிகள் சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் முகாமிட்டு சீட் பெற்ற கடும் முயற்சி கொண்டுள்ளனர். கடந்த கடலூர் நகரமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக நகர செயலாளர் குமார் அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது பதவியை ராஜிநாமா செய்துள்ள சி.கே.சுப்பிரமணியன் சென்னையில் முகாமிட்டு வேட்பாளர் குமார் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சி.கே.சுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள வித்தியாசத்தில் சி.கே.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். இதனையடுத்து தற்போது நகரச் செயலாளர் குமார் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கேட்டு சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

கடலூர் நகராட்சிக்கு ஆணையர் நியமனம்: கடலூர் நகராட்சி ஆணையாளர் காளிமுத்து கடந்த சனிக்கிழமை நடைபயிற்சி சென்ற போது மர்மநபர்களாக் தாக்கப்பட்டு கை, கால் முறிவு ஏற்பட்டு தனியார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதா, கடலூர் நகராட்சி ஆணையராக, நாகப்பட்டனம் நகராட்சி ஆணையராக இருந்த பி.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்று தேர்தல் பணிகளை கவணிக்கவுள்ளார் என நகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.