முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் பெரியார்தெருவில் அமைந்துள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் ஆக.19-ம் தேதி விக்னேஸ்வரபூஜையுடன் தொடங்கியது. 20-ம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

சிதம்பரம் பெரியார்தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சிதம்பரம் பெரியார்தெருவில் அமைந்துள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் ஆக.19-ம் தேதி விக்னேஸ்வரபூஜையுடன் தொடங்கியது. 20-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஆக.28-ம் தேதி வியாழக்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. கோயில் அருகே உள்ள தேரடியிலிருந்து தேர் புறப்பட்டு முக்கியச்சாலைகள் வழியாக மீண்டும் தேர்நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஆக.29-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றனர். உற்சவ   ஏற்பாடுகளை டி.சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

சிதம்பரம் பெரியார்தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் பழுதடைந்து பல வருடங்களாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதுகுறித்து தினமணியில் செய்தி, புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தோம். இதனையடுத்து பக்தர்களின் சீரிய முயற்சியில் திருச்சி பெல் நிறுவனம் ரூ 1.86 லட்சம் செலவில் புதிய தேர் சக்கரங்களை தயாரித்து வழங்கியது. மேலும் பக்தர்கள் அளித்த நன்கொடை உள்பட மொத்தம் ரூ 4லட்சம் செலவில் தேர்சக்கரம் மற்றும் மரவேலைகள் செய்யப்பட்டு தேர் சீரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.