தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு செப்.18ம் தேதி தேர்தல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு செப்-18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், 28-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு செப்-18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், 28-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இம்மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வார்டு எண்.15 மற்றும் 19 ஆகிய பதவிகளுக்கும், சாத்தூர் வட்டார ஊராட்சி உறுப்பினர் வார்டு எண்-13, சிவகாசி வட்டார ஊராட்சி உறுப்பினர் வார்டு எண்-8, வெம்பக்கோட்டை வட்டார ஊராட்சி உறுப்பினர் வார்டு எண்-7 ஆகிய பதவிகளுக்கும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பெரியநாயகிபுரம், சாத்தூர் ஒன்றியத்தில் உள்ள வெங்கடேஸ்வரபுரம், சிவகாசி ஒன்றியத்தில் உள்ள கவுண்டம்பட்டி, திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள புல்லநாயக்கன்பட்டி, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள நதிக்குடி, வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள காடனேரி மற்றும் கீழகோபாலபுரம் ஆகிய ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.

அதேபோல், இம்மாவட்டத்தில் உள்ள 73  ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ராஜபாளையம் நகராட்சி வார்டு எண்-10 மற்றும் 15, விருதுநகர் நகராட்சியில் 10,21 மற்றும் 34 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இப்பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 28-ம் தேதி தொடங்கி,தொடர்ந்து செ-4ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதையடுத்து செப்-5ம் தேதி  வேட்பு மனுவின் மீது பரிசீலனையும், செப்-8ம் தேதி வேட்பு மனுக்களை மாலை 3 மணி வரையில் திரும்பப் பெறவும், அன்றே இறுதிப்பட்டியலும் வெளியிடப்படுகிறது. பின்னர் செப்.18-ம் தேதி வாக்கு பதிவும், செப்.22ம் தேதி அந்தந்த கிராம ஊராட்சிகள் மற்றும் வட்டார ஊராட்சிகள் ஆகியவைகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த நகராட்சியிலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

எனவே கடந்த 30.6.2014 தேதி வரையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மட்டும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT