முகப்பு
தற்போதைய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: சிதம்பரத்தில் திரண்ட கிராமப்புற மக்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை, விநாயகர் குடை உள்ளிட்ட பொருள்கள் வாங்க சிதம்பரம் நகருக்கு சுற்றுப்புற கிராமங்கள், நகர்களில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் நகரில் பொருள்கள் வாங்க திரளான மக்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை, விநாயகர் குடை உள்ளிட்ட பொருள்கள் வாங்க சிதம்பரம் நகருக்கு சுற்றுப்புற கிராமங்கள், நகர்களில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை திரண்டனர். இதனால் வர்த்தக பகுதியான மேலரதவீதியில் கூட்டம் அலைமோதியது. சாலையோரம் இருபுறமும் தரைக்கடைகள் போடப்பட்டு விநாயகர்சிலை, விநாயகர்குடை, தேங்காய், பொறி, அவல், பொட்டுக்கடலை, நாவப்பழம், அருகம்புல்மாலை, எருக்கன் மாலை உள்ளிட்ட விநாயகருக்கு படைக்க பயன்படுத்தப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் மேலரதவீதி வழியாக பேருந்து, கார் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியாக போக்குவரத்து போலீஸாரால் பேருந்துகள் திருப்பி விடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.