முகப்பு
தற்போதைய செய்திகள்

வீராணம்ஏரிக்கு கீழணையிலிருந்து கூடுதலாக நீர் திறப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரையில் கீழணை உள்ளது. கடந்த ஆக.10-ம் தேதி மேட்டூரிலிருந்து கல்லணைக்கு நீர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியை நிரப்புவதற்காக கீழணையிலிருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 1500 கனஅடி நீர் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரையில் கீழணை உள்ளது. கடந்த ஆக.10-ம் தேதி மேட்டூரிலிருந்து கல்லணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து கடந்த ஆக.14-ம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து விநாடிக்கு 1002 கனஅடி திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் கீழணைக்கு ஆக.21-ம் தேதி சேர்ந்தது.

கீழணையின் மொத்தக் கொள்ளளவு 9 அடியாகும். தற்போது 6 அடி நீர் உள்ளது.சென்னை குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை குடிநீர் வாரியத்திற்கு வீராணம் ஏரியிலிருந்து நீர் அனுப்புதவதற்கு ஏதுவாக கீழணையிலிருந்து, வடவாறு வழியாக கடந்த ஆக.22-ம் தேதி முதல் விநாடிக்கு 250 கனஅடி நீர் வீராணம்ஏரிக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் வீராணம்ஏரியை நிரப்பும் வகையில் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வியாழக்கிழமை முதல் விநாடிக்கு 1500 கனஅடி நீர் கூடுதலாக திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது ஏரியில் 41.50 அடிநீர் உள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 70 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.