தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பயணிடம் பிக்பாக்கெட் அடித்த இளைஞர் கைது

விருதுநகர் அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(39). இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மலைப்பட்டியிலிருந்து விருதுநகருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது,

எஸ். பாண்டியன்

விருதுநகரில் ஓடும் அரசு பேருந்தில் பயணிடம் ரூ.300 பிக்பாக்கெட் அடித்த இளைஞரை கையும், களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(39). இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மலைப்பட்டியிலிருந்து விருதுநகருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, முகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் கூட்டமாக அதிகமாக இருந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் பாத்திமா நகருக்கும்-பழைய பேருந்து நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டிருக்கும் போது வீரபத்திரன் பையில் நைசாக கைவிட்டு சட்டைப்பையில் இருந்த ரூ.300ஐ எடுத்தாராம்.

உடனே சுதாரித்துக் கொண்ட வீரபத்திரன், அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின் போலீஸார் விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சசிக்குமார்(28) என்ற விவரம் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் சசிக்குமார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக  விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT