தற்போதைய செய்திகள்

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கைது

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி, வளநாடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (48). இவரது மனைவி கவிதா (42), இவர்களுக்கு அபிராமி(16), அருணா (15), அம்பிகா (13) ஆகிய 3 மகள்களும், வசந்தகுமார் (10),

சி.சண்முகவேல்

திருச்சி கருமண்டபம் அருகே இன்று பகல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி, வளநாடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (48). இவரது மனைவி கவிதா (42), இவர்களுக்கு அபிராமி(16), அருணா (15), அம்பிகா (13) ஆகிய 3 மகள்களும், வசந்தகுமார் (10), விக்னேஷ் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மது அருந்தும் பழக்கம் உள்ள முருகன், தனது மனைவி கவிதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் கோபித்துக்கொண்ட கவிதா தனது மகன், மகள்களை அழைத்துக்கொண்டு திருச்சி கருமண்டபம், ஆர்.எம்.எஸ்.காலனி, சமத்துவ நகர் முதல் தெருவி்ல் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு அவர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளார்.இதற்கிடையே முருகன், கவிதாவிடம் குடும்ப அட்டை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு கவிதா தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பகல் சமத்துவ நகர் வந்த முருகன் அங்கு கவிதாவிடம் மீண்டும் குடும்ப அட்டை கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் தான் வைத்திருந்த கத்தியால் கவிதாவை குத்திவிட்டு தப்பி ஓடினர். பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த கன்டோன்மென்ட் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் முருகனை பிடிக்க அனைத்து சோதனை சாவடிக்கும் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து எடமலைப்பட்டிபுதூர் சோதனைச் சாவடி வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற முருகனை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT