முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சேர்வராயனின் 16 வயது மகள், சீலநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது எதிர் வீட்டில் குடியிருந்து வருபவர் சண்முகவேல் மகன் மருதுபாண்டி (28). இவர் மாணவியை கிண்டல், கேலி செய்து வந்தாராம். 21.9.14-ம் தேதி இரவு வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மாணவியை மருதுபாண்டி,  திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி, கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனையடுத்து மாணவி சத்தமிடவே, வீட்டார் வெளியே வந்து மருதுபாண்டியை சத்தம் போட்டுள்ளார்கள். மேலும் இது தொடர்பாக பஞ்சாயத்து பேசி முடித்துள்ளார்கள்.

டிசம்பர் 2-ம் தேதி (செவ்வாய்கிழமை) மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சின்னராஜ் என்பவரின் சோளக்காட்டில் மறைந்திருந்த மருதுபாண்டி, மாணவியை கையைப் பிடித்து இழுத்து உன்னை திருமணம் செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார். தப்பி ஓடிவந்த மாணவி இது குறித்து வீட்டில் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →