தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 190 கிராம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த டைகர் ஏர்வேஸ் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மெட்டர் டிரெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

சி.சண்முகவேல்

திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த விமான பயணி ஒருவரிடமிருந்து 190 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த டைகர் ஏர்வேஸ் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மெட்டர் டிரெக்டர் மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் கொண்டு வந்த டிவிடி பிளேரில் சப்தம் ஒலித்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த டிவிடி பிளேரை சோதனையிட்டதில் அதில் 190 கிராம் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ரகுமான்(45) என்பது தெரியவந்தது. இவர் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.5.19 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT