புணே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சிக்கு அழைத்து வந்த ஆயுள் தண்டனை கைதி கர்நாடக அருகே தப்பியோடிய சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய சிறை வாடன்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி,பத்திக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (40). இவர் மீது மகராஷ்டிரா மாநிலம் புணே, கடலூரில் ஒரு கொலை வழக்கிலும், மேலும் கடந்த 2011-ம் ஆண்டு டி.என்.பி எஸ்.சி குரூப் 2, வினத்தாள்கள் ஈரோட்டில் அச்சடித்து விநியோகம் செய்த வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் புணே, சிவாஜி நகரில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக தவமணியை, கடந்த மாதம் 25-ம் தேதி திருச்சி ஆயுதப்படை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் உள்பட 6 பேர் புணேவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ரயிலில் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
கர்நாடகம் மாநிலம் குல்பார்க் என்ற இடம் அருகே ரயில் மெதுவாக வந்த போது தவமணி தப்பியோடினர். இந்தச் சம்பவம் குறித்து மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் விசாரணை மேற்கொண்டதில் கைதியை தப்பியோட அவரது உறவினரிடம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் ரூ. 40 லட்சம் வாங்கியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்த மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்ததில், திருச்சி மத்திய சிறை முதன்மை வார்டன் இளங்கோவன் (45), வார்டன்கள் புண்ணியமூர்த்தி (30), போஸ் (30), பாலமுருகன் (30) ஆகியோர் தவமணி தப்பியோட உடந்தையாக இருந்ததும், தொடர்ந்து அவரிடம் செல்போனில் தொடர்புக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறை முதன்மை வார்டன் இளங்கோவன், வார்டன்கள் புண்ணியமூர்த்தி, போஸ், பாலமுருகன் ஆகியோரை திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.