முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 248 கிராம் தங்கம் பறிமுதல்

இலங்கை, சிலோனிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லையன்ஸ் விமான பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை

Updated On : 16 டிசம்பர், 2014 at 8:43 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:11 PM

திருச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த இலங்கை பெண் பயணியிடமிருந்து 248 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை, சிலோனிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லையன்ஸ் விமான பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் காலில் அணிந்திருந்த வெள்ளி காப்புலிருந்து சப்தம் ஒலித்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த காப்பை சோதனையிட்டதில் அதில் 248 கிராம் தங்கத்தை உருக்கி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6.75 லட்சம் ஆகும். 

தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் இலங்கையச் சேர்ந்த ராமசாமி மகள் யோகேஸ்வரி (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.