தற்போதைய செய்திகள்

அரசு மகளிர் காப்பகத்தில் 6 பெண்கள் தப்பி ஓட்டம்

மன்னார்புரம் அருகேயுள்ள காஜாமலை,  ரேஸ்கோர்ஸ் (குதிரை பந்தய சாலை) சாலையில் அரசு மகளிர் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் பல்வேறு குற்ற வழக்கில்  தொடர்புடைய 17 பெண்கள்

சி.சண்முகவேல்

திருச்சி மன்னார்புரம் அருகேயுள்ள அரசு மகளிர் காப்பகத்திலிருந்து 6 பெண்கள் தப்பியோடியிருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

மன்னார்புரம் அருகேயுள்ள காஜாமலை,  ரேஸ்கோர்ஸ் (குதிரை பந்தய சாலை) சாலையில் அரசு மகளிர் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் பல்வேறு குற்ற வழக்கில்  தொடர்புடைய 17 பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.செவ்வாய்க்கிழமை அதிகாலை காப்பக ஊழியர்கள் உள்ளே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அடைக்கப்பட்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரஸியா (25), பெங்களுரூ பகுதியைச் சேர்ந்த ஷானா (21), அபிமண்டல் (22), ஷானா ஷேக் (23), சல்மா (21), நிஷா சலோமிஸியா (25) ஆகிய 6 பேர் தப்பியோடிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காப்பகக் கண்காணிப்பாளர்  தேவிகா, கே.கே. நகர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸôர்  வழக்குப் பதிந்து தப்பியோடிய பெண்களை தேடி வந்தனர்.இந்நிலையில் விமான நிலையம், வயர்லஸ்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பெண்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரித்தில் அவர்கள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய ஷானா, ரஸியா என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அறையினுள்ள ஜன்னல் கம்பியியை நெம்பி, பின்னர் தடுப்புச் சுவர் மீது  ஒன்றன் பின் ஒன்றாக கீழே இறங்கி தப்பியோடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பிடித்த அந்த பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தலைமறைவான 4 பெண்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT