மதுராந்தகம் இரயில் தண்டவாளத்தில் விரிச்சல்: இரயில்கள் காலதாமதம்
மதுராந்தகம் இரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிச்சல் காரணமாக, சரிச்செய்யப்பட்டு சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக, வியாழன்கிழமை காலை இரயில்கள் சென்னை நோக்கி சென்றன்.
மதுராந்தகம் இரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிச்சல் காரணமாக, சரிச்செய்யப்பட்டு சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக, வியாழன்கிழமை காலை இரயில்கள் சென்னை நோக்கி சென்றன்.
மதுராந்தகம் இரயில் நிலையத்தில் விழுப்புரம்--சென்னை பாசஞ்சர் இரயில் வந்து நின்றுவிட்டு, அதன் பின் கிளம்ப தயார் ஆகும்போது, சிக்னல் கிடைக்கவில்லை. இதுபற்றி இரயில்நிலைய மாஸ்டர் ஜாபரிடம் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு மதுராந்தகம் ரயில் தண்டவாளங்களை சரி செய்யும் ஊழியர்கள் விரைந்து தண்டவாள பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில விரிச்சல் ஏற்பட்டதை கண்டறிந்து அதனை சரி செய்தனர். அதன்பின்பு, விழுப்புரம்--சென்னை பாசஞ்சர் இரயில், சென்னை புதுச்சேரி இரயில் ஆகிய இரு இரயில்களும் சுமார் 1 மணி நேரம் காலதாமதத்துக்கு பின் சென்னை நோக்கி சென்றன.
Advertisement
இதனால் மதுராந்தகம் இரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.