திருச்சி மலைக்கோட்டை அருகே தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.தலைமறைவான ரெளடி குணாவை தேடிவருகின்றனர்.
மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் குணா(எ)குணசேகரன்.பிரபல ரெளடியான இவர் மீது கொலை,கொள்ளை,ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி, மலைக்கோட்டை அருகேயுள்ள அரபிக்குளத்தெருவில் நள்ளிரவு ஒரு வீட்டின் சுவர் மீது குதித்த குணாவை, அப்பகுதியினர் பிடித்து கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடு்த்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த குணா, கடந்த 18-ம் தேதி தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு அரபிக்குளத் தெருவில் வசிக்கும் தொழிலதிபர் ஆறுமுகம் வீட்டுக்குச் சென்று அங்கு தனியாக இருந்த ஆறுமுக மனைவியிடம் ஆயுதங்களை காட்டி ரூ.3 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
அதன் பிறகு குணா தொடர்ந்து ஆறுமுகத்திடம் போனில் மிரட்டி வந்துள்ளார். இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து குணா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் குணா கூட்டாளிகளான லால்குடி பகுதியைச் சேர்ந்த கண்ணாடி ஆனந்த்,பாலக்கரையைச் சேர்ந்த மயில்வாகனன் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குணா மற்றும் சிலை தேடிவருகின்றனர். மேலும் தொழிலதிபர் ஆறுமுக வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.