தற்போதைய செய்திகள்

தனியார் முதலீட்டை எதிர்த்து விரைவில் தொடர் வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

திருச்சியில் தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளத்தின் 22வது மாநாடு நாளை தொடங்கி திங்கட்கிழமை வரை நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று திருச்சிக்கு வந்த

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சியில் தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளத்தின் 22வது மாநாடு நாளை தொடங்கி திங்கட்கிழமை வரை நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று திருச்சிக்கு வந்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சிஹெச் வெங்கடாச்சலம், செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது

வங்கி மற்றும் காப்பீட்டுத்துறையில் தனியார் முதலீட்டை அனுமதிக்க கூடாது, இந்தியாவில் உள்ள வங்கிகளில், 75லட்சம் கோடி ரூபாய் பொதுமக்களின் வைப்புத்தொகையாக உள்ளது.ஆனால் சீர்திருத்தம் என்றப்பெயரில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் ஆக்கினால் பெழதுமக்களின் சேமிப்பு பணம் தனியார் முதலாளிகளிடம் சென்றுவிடும்.

இந்தியா முழுவதும் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளளன. 5லட்சம் ரூபாய் கோடி அளவிற்கு வராக்கடன் நிலுவையில் உள்ளது. 7 ஆயிரம் பேர் இந்த தொகையை கடனாக வாங்கிக்கொண்டு திருப்பிச்செலுத்தாமல் ஏமாற்றி வருகிக்ன்றனர். வங்கி கடன் சீர்திருத்தம் என்றபெயரில் , பெரும் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரிவழங்க மத்திய அரசு முயற்சிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த வராக்கடன் சலுகை காரணமாக இந்த லாபத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும. தனியார் மயத்தை அனுமதிக்க கூடாது. வராக்கடன்களை விரைவில் வசூலிக்க வேண்டும். முதுற்கட்டமாக வராக்கடன் நிலுவை பட்டியலை வெளியிட  வேண்டும். மேலும் வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்ததை விரைவில் உருவாக்கி அமல்படுதத வேண்டும. இந்த கோரிக்கைளை வலியிறுத்தி நாடு முழுவதும் ஜன.7ம் தேதி ஒரு அடையாள வேலைநிறுத்தமும் . அதனைத் தொடர்ந்து ஜனவரி 21 முதல் 24 வரை நான்கு நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும், அதனைத்தொடர்ந்து மார்ச் 16 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப்படும் என்றார் வெங்கடாச்சலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT