முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கண்டித்து சிதம்பரத்தில் வாசன் கோஷ்டியினர் இருபிரிவினராக ஆர்ப்பாட்டம், மறியல்

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ள தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கண்டித்தும், மண்ணிப்பு கேட்க வலியுறுத்தியும் சிதம்பரத்தில் வாசன் கோஷ்டியினர் இருபிரிவினராக தனி, தனியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ள தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கண்டித்தும், மண்ணிப்பு கேட்க வலியுறுத்தியும் சிதம்பரத்தில் வாசன் கோஷ்டியினர் இருபிரிவினராக தனி, தனியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸார்: கீழரதவீதியில் காமராஜ்சிலை அருகே தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கண்டித்து கடலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் துரை.சிங்காரவேலு, மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் என்.மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். பாலா, கிஷோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், முன்னாள் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த், பொதுச்செயலாளர் கே.நாகராஜ், நிர்வாகிகள் ராஜாசம்பத்குமார், எம்.ஜி.ராஜராஜன், இரும்பு ஆறுமுகம், ராஜி, சுப்புலட்சுமி, மீனா, ஜனகம் உள்ளிட்டோர் பங்கேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

மூப்பனார் பேரவையினர்: சிதம்பரம் மேலரதவீதியில் மூப்பனார் பேரவை சார்பில் தில்லை முதல்வர் கெஜ்ரிவாலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எம்.என்.ராதா, மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார், கட்டாரி சந்திரசேகரன், ஆர்.வி.சின்ராஜ், ஆட்டோ குமார், தில்லைசெல்வி, பூமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments