தற்போதைய செய்திகள்

திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா இன்று காலமானார்

தினமணி

திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார். அவருக்கு வயது 74 இன்று அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து வடபழனியில் உள்ள விஜயா நர்சிங் ஹோமில், தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்

ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார். இவர் கடைசியாக இயக்கிய படம், ‘’தலைமுறைகள்’’.

இந்தப் படத்தில்,  அவரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர் பாலுமகேந்திரா.

1939 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார்.

புணா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற பாலுமகேந்திரா 1971ல் தங்கப் பதக்கம் பெற்றார்.  'நெல்லு' மலையாள படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்ப் படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT