முகப்பு
தற்போதைய செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

உப்புநீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் வல்லம்படுகை அருகே தடுப்பணை அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

உப்புநீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் வல்லம்படுகை அருகே தடுப்பணை அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு புவனேஸ்வரி மணிவண்ணன் (ஜெயங்கொண்டப்பட்டினம்) தலைமை வகித்தார். ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஏ.ஜீவானந்தம் (திருநாரையூர்), கே.சக்திவேல் (கூடுவெளிச்சாவடி), கே.பாபுராஜன் (ம.கொளக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.கலைவாணி விஸ்வநாதன் (செட்டிக்கட்டளை) வரவேற்றார். கே.முத்துலட்சுமி (கருப்பூர்), விஸ்வநாதன் (பூலாமேடு), எம்.ஜூனைதாபேகம் (எள்ளேரி), எஸ்.மோகன்ராஜ் (கடவாச்சேரி) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஜூனைதா உசேன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்: தானே புயல் வீடுகட்டும் திட்டத்தில் மெத்தன போக்காக உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும், தானா திட்ட வீடுகள் கட்ட மணல் அள்ளிக்கொள்ள பயனாளிகளுக்கு அரசே உத்தரவு வழங்க வேண்டும், புதிதாக பதிவு செய்யப்பட்ட 18 வயது பூர்த்தியானவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டை வழங்க வேண்டும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும்,

Advertisement

நந்திமங்கலம்-பூலாமேடு இடையே பாலம் கட்ட அராசணை வெளியிட்ட தமிழகஅரசுக்கு நன்றி தெரிவிப்பது, சிதம்பரத்லிலிருந்து திருச்சிக்கு புதிய ரயில்வே பாதை அமைக்க மத்தியஅரசை கோருவது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments