முகப்பு
தற்போதைய செய்திகள்

புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் வெள்ளாற்றின் குறுக்கே ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் சேதமுற்றதால், புவனகிரி மக்கள் கோரிக்கையை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

சிதம்பரம் அருகே புவனகிரியில் பழுதடைந்துள்ள வெள்ளாற்று பாலம் சீரமைக்கும் பணி நடைபெறுவதால், தற்காலகமாக அருகாமையிலேயே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் வெள்ளாற்றின் குறுக்கே ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் சேதமுற்றதால், புவனகிரி மக்கள் கோரிக்கையை ஏற்று பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாலத்தில் கடந்த 2 மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புவனகிரி மற்றும் கீரப்பாளையத்தைச் சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து தரைப்பாலம் அமைக்க வேண்டும், புதிய பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி புவனகிரி வியாபாரிகள் சங்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்தனர்.

போராட்டத்தை முன்னிட்டு சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில்ல அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த ஜன.17-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் விரைவில் கீரப்பாளையம்- புவனகிரி இடையே வெளாற்றில் தற்காலிக தரைப்பாலம் அமைத்து கார் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுப்பது என்றும், புதிய பாலம் ரூ.20 கோடி செலவில் கட்ட 2014-15ற்குள் ஒப்புதல் பெற்று கட்டுவது, வருகிற மார்ச் 31-க்குள் புவனகிரி பாலத்தில் 6 தூண்கள் சீரமைப்பு பணியை முடித்து 50 டன் எடையுள்ள வாகனங்கள் செல்ல போக்குவரத்திற்கு திறப்பது என நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் புவனகிரி சுந்தரமூர்த்தி மாரியம்மன் கோயில் வழியே வெள்ளாற்றின் கரையிலிருந்து கீரப்பாளையம் மேட்டுத்தெரு வழியாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் வழியாக கார், பள்ளி வாகனங்கள் மற்றும் லகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.