முகப்பு
தற்போதைய செய்திகள்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை உச்சீநிதமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது போல் தமிழகஅரசு விடுதலை செய்ய வேண்டும் என

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை உச்சீநிதமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது போல் தமிழகஅரசு விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி மாநில பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிரகாரித்தது செல்லாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம், இம்மூவரின் மரணதண்டனையை ரத்து செய்து வாழ்நாள் தண்டனையாக குறைந்து அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அளித்துள்ள இத்தீர்ப்பு நீதிக்கும், மனித உரிமைகளுக்கும் கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.

தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டது போல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 54 மற்றும் குற்றவியல் நடைமுறை விதி 432 (1), 433  ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டுள்ள தண்டனை குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகஅரசு இம்மூவரின் நீண்ட கால சிறைவாசத்தை கணக்கில் கொண்டு, இம்மூவரையும் அதேபோல் இவ்வழக்கில் 22 ஆண்டுகளாக சிறையில் உள்ள மற்ற நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.