நிலையான ஆட்சி அமைய 27 நட்சத்திர கோயில்களில் வழிபாடு!
இந்தியாவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என வேண்டி சிதம்பரத்தில் உள்ள சர்வ சக்தி பீடம் சார்பில் தமிழகத்தில் உள்ள 27 நட்சத்திர கோயில்களில் ஜபவேள்வி, நட்சத்திர வழிபாடு நடத்தப்படவுள்ளது.
இந்தியாவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என வேண்டி சிதம்பரத்தில் உள்ள சர்வ சக்தி பீடம் சார்பில் தமிழகத்தில் உள்ள 27 நட்சத்திர கோயில்களில் ஜபவேள்வி, நட்சத்திர வழிபாடு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சர்வ சக்தி பீட நிறுவனர் தில்லை சீனு தெரிவித்தது: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு பிரதமர் பதவி கிடைக்கவும், நிலையான ஆட்சி அமையவும், அமைதி நிலவவும் வேண்டி தமிழகத்தில் உள்ள 27 நட்சத்திர கோயில்களில் ஜபவேள்வி அர்ச்சனை மற்றும் நட்சத்திர வழிபாடு நடத்தப்படவுள்ளது. பிப்.24-ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கி கூத்தனூர், பட்டீஸ்வரம், திருஆவினன்குடி, மன்னார்குடி, கதிராமங்கலம், திருகொல்லிகாடு, திருவள்ளூர், திருச்செந்தூர், மயிலாப்பூர், திருவாலங்காடு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருவேற்காடு, கும்பகோணம், திருவடைமருதூர், லால்குடி, நாச்சியார்கோயில், திருப்பராய்த்துறை, நாமக்கல், திருவானைக்கோவில், திருச்சி, திருவந்திபுரம், மகாபலிபுரம், மேகடம்பூர், திருவாரூர், திருவையாறு, ஓமாப்புலியூர் ஆகிய நட்சத்திர கோயில்களில் மார்ச் 24-ம் தேதி வரை வழிபாடு நடைபெறுகிறது.