தற்போதைய செய்திகள்

திருச்சி மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியில் இன்று ரூ.12 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட் கூட்டத்துக்கு மேயர் ஆர். ஜெயா தலைமையேற்றார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் வி. ஐயப்பன் 2014 - 15ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி மாநகராட்சியில் இன்று ரூ.12 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்துக்கு மேயர் ஆர். ஜெயா தலைமையேற்றார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் வி. ஐயப்பன் 2014 - 15ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில், மொத்த வரவு ரூ.304.6 கோடி, செலவு ரூ.316.51 கோடி. பற்றாக்குறை ரூ.12.05 கோடி.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு அம்சங்கள் :

கல்வி நிதியில் இருந்து ரூ.6.70 கோடியில் மாநகராட்சிப் பள்ளிக் கட்டங்கள் மேம்படுத்துதல், வளாகங்களை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு செய்தல்.

திருச்சி மாநகராட்சியில்  புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் உட்பட 293 கி.மீ. நீளத்துக்கு ரூ.250 கோடியில் மண் சாலைகளை தார்சாலைகளாகவும், கான்க்ரீட் சாலைகளாகவும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தில்லை நகரில் ரூ.19 கோடியில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

10 கோடியில் பொன்மலை ஜி. கார்னர் மற்றும் காந்தி சந்தை ஆகிய இடங்களில் நவீன ஆட்டிறைச்சிக் கூடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது

மக்கும் தன்மை உள்ள கழிவுகளில் இருந்து ரூ.90 லட்சத்தில் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தை அடுத்து, வரும் 21ம் தேதி நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT