சிதம்பரத்தில் தமிழ் பரப்புரை ஊர்தி பயணத்திற்கு வரவேற்பு
பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையிலான தமிழ்பரப்புரை ஊர்தி பயணத்திற்கு சிதம்பரத்தில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையிலான தமிழ்பரப்புரை ஊர்தி பயணத்திற்கு சிதம்பரத்தில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பன்னாட்டு தமிழுறவு மன்றமும், அனைத்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையில் 22-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை என்ற தமிழ் பரப்புரை ஊர்திப் பயணம் பிப்.12-ம் தேதி கன்னியாக்குமரியில் தொடங்கி தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி வழியாக சென்னையை பிப்.23-ம் தேதி சென்றடைகிறது.
இப்பிரசார ஊர்தி சிதம்பரத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்தது. வடக்குவீதி தலைமை தபால் நிலையம் அருகே பிரசார ஊர்திக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முனைவர் செல்ல.பாலு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வ.மு.சேதுராமன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அ.அன்பு, பி.சிவபாலன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.