முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் ஆட்டம் போன்று உள்ளது அனுக்கூறுகளின் ஆட்டம்: நீதிபதி ராமசுப்பிரமணியன்

அனுக்களை பிளக்கும் போது, அனுக்கூறுகள் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவம் போன்று அற்புதமாக ஆட்டம் போடுவதை பார்த்துதான் ஜெனிவாவில் விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் முன்பு அவரது சிலையை வைத்துள்ளனர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

அனுக்களை பிளக்கும் போது, அனுக்கூறுகள் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவம் போன்று அற்புதமாக ஆட்டம் போடுவதை பார்த்துதான் ஜெனிவாவில் விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் முன்பு அவரது சிலையை வைத்துள்ளனர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான வியாழக்கிழமை மாலை 5.30 தொடங்கியது.  இவ்விழா தொடர்ந்து மார்ச்.3-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

தொடக்கவிழாவிற்கு எஸ்.எஸ்.சிவக்குமார் தீட்சிதர் தலைமை வகித்தார். கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் எம்.காசிராஜ தீட்சிதர் முன்னிலை வகித்தார். நாட்டியாஞ்சலி கமிட்டி தலைவர் ஏ.கே.நடராஜன் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நாட்டியாஞ்சலியை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியது:நீதிமன்றம் என்பது அதுவும் ஒரு சபை. அங்கு எங்களை நீதியரசர் என்று சொல்லுவார்கள். ஆனால் எல்லா சபைகளுக்கும் மிகப்பெரியச்சபை. என்பதால், எல்லா நாயகர்களுக்கும், மிகப்பெரிய நாயகர் இந்த சபாநாயகர். ஆடல்வல்லான் சிவராத்திரியன்று நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்பதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2004 ஆண்டு ஜூன் 18-ம் தேதி ஜெனிவாவில் சேர்ன் (CERN) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் மிகப்பெரிய அற்புதம் நிகழ்ந்த்து. 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை வைக்கப்பட்டது. இதற்கு காரணம் என்னவென்றால் தில்லையில் ஆடுகின்ற நடராஜர்தான் காரணம். இயற்பியலில் அணுவை பிளக்கும்போது அணுக்கூறுகள் ஆடல்வல்லானை போன்று அற்புதமாக ஆட்டம் போடுகின்றன. அணுவை திடப்பொருளாகதான் நினைத்து வந்தோம், தற்போது திடப்பொருள் அல்ல. அதனுள் பல்வேறு அனுக்கூறுகள் ஆட்டம், பாட்டம் போடுகின்றன என்பது தெரியவந்துள்ளது என 1972-ல் இயற்பயில் அறிஞர் பிரிட்ஸ் ஆஃப் கேப்ரா ஆஸ்திரேலியா பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த இவர் 1975-ல் தாவோ ஆஃப் பிசிக்ஸ் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் கீழை நாடுகளில் இருக்கும் ஆன்மீகமத்திற்கு,  இன்றைக்கு 21-ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள இயற்பியலுக்கும் எப்படிப்பட்ட தொடர்பு இருக்கிறது என எழுதினார். இதனை புரிந்து கொண்ட பின்னர்தான் அந்நிறுவனத்தின் முன்பு ஆடல்வல்லான் சிலையை வைத்துள்ளார்கள்.

சிவனுக்கு உரிய மந்திரம் பஞ்சாட்சர மந்திரம்,  சிவனுக்குரிய தொழில்கள் ஐந்து. ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்திலே மறைத்தல் என்கிற மாயையிலே நம்மை ஆக்குகிற காரணத்தினாலே, இன்றைக்கு உலக விஞ்ஞானம், ஆன்மீக முன்னேறிய அளவிற்கு விஞ்ஞானம் முடியாமல் போய் இருக்கிறது. இந்த ஐந்துக்கும், சிவபெருமானுக்கும் பல தொடர்புகள் உண்டு.  நாட்டிய இலக்கணத்தை குறித்தும் நூலுக்கும் பஞ்சமரபு என்று பெயர்.  நடனத்தை பற்றி 5 கருத்துகளை சொல்லுகிறார்கள்.  இசைமரபு,  வாச்சியமரபு,  நிருத்தமரபு,  அபிநயமரபு,  தாளமரபு என 5 கருத்துகளை கூறுகிறார்.  நடனத்திலேயே பயன்படுத்தக்கூடிய உடல் உறுப்புகளின் அசைவுகள்தான் 108 கரணங்களாக உள்ளது நீதிபதி ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். விழாவில் புதுதில்லி சங்கீத நாடக அகாதெமி உறுப்பினர் கீதாசந்திரன், நீதிபதிகள் மருபாண்டி, ராதிகா, செந்தில்பாபு, சுரேஷ்பாபு, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நாட்டியாஞ்சலி அறக்கட்டளைஇணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர் டாக்டர் ஆர்.முத்துகுமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் நன்றி கூறினார்.

நாட்டியாஞ்சலியில் ஜே.இந்துமாலினி, அனுஷியா ஹரிராஜன்,  அண்ணாமலைப் பல்கலைக்கழக கவின் கலைத்துறை மாணவர்கள், யுஎஸ்ஏ பத்மாராணி ராசையா கண்ட்டு, டாக்டர் பத்மாசுப்பிரமணியம். ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது மாணவியர்கள், புதுதில்லி நவ்தேஜ்சிங் ஹோஹர், திருநங்கை நர்த்தரி நடராஜ், ஆகியோரின் பரதம், யு.எஸ்.ஏ நளினி பிரகாஷ் மற்றும் விஜய்பாலபர்த்தி ஆகியோரின் அர்த்தநாரீஸ்வரம் நடனம், புதுதில்லி கீதாசந்திரன், பெங்களூர் பத்மாலயா நாட்டியப்பள்ளி மாணவியர்கள், புனே நிருத்ய பிரேரணா மாணவியர்கள், மும்பை ரூபக் மேத்தா, மும்பை நிருத்ய கலாநிகேதன் மாணவியர்கள், மும்பை பிராச்சி சாத்தி, பெங்களூர் த்வனி ராஜேஸ்வரி, சென்னை வழூவூரார் ஆர்ட்ஸ் அகாதெமி டாக்டர் மகாலட்சுமி பக்தவத்சலம், கமலா கற்பகவல்லி, மாளவிகா குமரன், பெங்களூர் ரக்ட்சிதா பிரசாத், சென்னை எஸ்.அர்ச்சனா, சென்னை எம்.செந்தில்குமார், மலேசியா நிருத்ய நடனாஞ்சலி சித்திரை மற்றும் மாணவியர்கள், ஐய்வர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாசிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய நாட்டியாஞ்சலியின் முதல்நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு முடிவுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments