தஞ்சாவூரில் கடந்த திங்கட்கிழமை இரவு இயற்கை எய்திய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம் இன்று காலை நடந்தது. அவரது உடல் அடக்கம் இயற்கை முறையில் அதாவது பள்ளிப்படை என்ற முறையில் நடைபெற இருந்தது.
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் வானகம் என்ற இடத்தில் உள்ள அவரது கனவு பல்கலைக்கழக வளாகத்திலேயே நம்மாழ்வாரின் உடல் அடக்கம் நடைபெறுகிறது.
நம்மாழ்வாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், முதலில் திருநீரு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்சகவ்யம், நவதானியம், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்பைப் புல் ஆகியவை அடுக்கப்பட்டது. அதன் மீது நம்மாழ்வாரின் உடல் வைக்கப்பட்டு, மீண்டும் மேற்கூறிய பொருட்கள் அவரது உடல் மீது அடுக்கப்பட உள்ளது. சுமார் ஐந்து அடுக்குகளை வைத்து அதன் மீது செம்மன் போட்டு மூடபடும். இம்முறையை பள்ளிப்படை முறை என்று அழைக்கிறார்கள்.
நம்மாழ்வாரின் இறுதிச் சடங்கில் சீமான், தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன், எம்எல்ஏ உ. தனியரசு, நடிகை ரோகிணி, தமிழ்நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயம், இயற்கை விஞ்ஞானிகள், இயற்கை மருத்தவர்கள், ஈஷா யோகா அமைப்பினர், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உட்பட 2000 முதல் 3000 பேர் வரை திரண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.