முகப்பு
தற்போதைய செய்திகள்

இரு பைக்குகள் மோதியதில் தவறி விழுந்தவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

கும்மிடிப்பூண்டி அருகே இரு பைக்குகள் நேரெதிரே மோதிக்கொண்டதில் பைக்கில் இருந்து தவறி சாலையில் விழுந்த நைனிசாமி(32) என்பவர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ் சக்கரத்தில்

தற்போதைய செய்திகள்

இரு பைக்குகள் மோதியதில் தவறி விழுந்தவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

கும்மிடிப்பூண்டி அருகே இரு பைக்குகள் நேரெதிரே மோதிக்கொண்டதில் பைக்கில் இருந்து தவறி சாலையில் விழுந்த நைனிசாமி(32) என்பவர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ் சக்கரத்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே இரு பைக்குகள் நேரெதிரே மோதிக்கொண்டதில் பைக்கில் இருந்து தவறி சாலையில் விழுந்த நைனிசாமி(32) என்பவர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

பொன்னேரி அடுத்த திருப்பாளலவனம் அருகே புதுச்சேரிமேடு கிராமத்தில் வசித்தவர் கன்னியப்பன் மகனான விவசாயி நைனிசாமி. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரின் மகன் சேகர்(35). உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று காலை பைக்கில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கும்புளி என்ற கிராமத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது தேவம்பேடு அருகே இவர்கள் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டவுன் பஸ் டி-34 என்ற அரசு பேருந்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே, மற்றொரு பைக்கில் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(45)  என்பவர் வந்துக் கொண்டிருந்தார்.

எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்குகளும் மோதிக்கொண்டதில் சேகர் ஓட்டி வந்த பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த நைனிசாமி பேருந்தின் கீழே விழுந்த போது பேருந்து சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →