முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கான இயந்திரங்கள் குறித்த பயிற்சி ஜன.20-ல் தொடக்கம்

சிதம்பரம் பகுதி விவசாயிகளுக்கு, மேம்படுத்தப்பட்ட வேளாண் இயந்திரங்களை இயக்குவது குறித்த பயிற்சி மற்றும் நெல் சாகுபடிக்கான வேளாண் கருவிகள் குறித்த பயிற்சி வருகிற ஜன.20-ம் தேதி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

சிதம்பரம் பகுதி விவசாயிகளுக்கு, மேம்படுத்தப்பட்ட வேளாண் இயந்திரங்களை இயக்குவது குறித்த பயிற்சி மற்றும் நெல் சாகுபடிக்கான வேளாண் கருவிகள் குறித்த பயிற்சி வருகிற ஜன.20-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது என சிதம்பரம் வேளாண் (பொறியியல்துறை) உதவி செயற்பொறியாளர் ரெ.குணசேகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வேளாண் இயந்திரங்கள், தேர்வு, செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சியும், நெல் சாகுபடியில் வேளாண் இயந்திரங்கள் தொகுப்பு குறித்த பயிற்சியும் சிதம்பரம் பள்ளிப்படை பூதகேணியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஜன.20 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. பயிற்சியில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஊரக வேலைவாய்ப்பற்ற விவசாயம் செய்யும் இளைஞர்கள் பங்கேற்கலாம்.

விவசாயிகள் ஏதேனும் சொந்தமாக இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் வைத்திருக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகளின் வயது வரம்பு 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். விவசாயிகள் வரும் ஜன.10-ம் தேதிக்குள் சிதம்பரம் அலுவலகத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 20 நபரப் மட்டுமே அனுமதிக்கபடுவதால் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிக்கையில் உதவி செயற்பொறியாளர் ரெ.குணசேகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.