வீட்டில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியிருந்தவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி இருந்த பிரகாஷ்(22) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீஸார்
தற்போதைய செய்திகள்வீட்டில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியிருந்தவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி இருந்த பிரகாஷ்(22) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீஸார்
கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி இருந்த பிரகாஷ்(22) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீஸார் திங்களன்று கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியில் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த இருப்பது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகருக்கு தகவல் வந்தது.இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அங்கு பிரகாஷ் என்பவரின் வீட்டில் 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தார்.
தொடர்ந்து அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார் ரேஷன் அரிசி மற்றும் அதை பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த இருந்த பிரகாஷை திருவள்ளூர் மாவட்ட குடிமை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து குடிமை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.