குடியரசு தின விழா: திருவண்ணாமலையில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
இந்த விழாவினை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை 8 மணிக்கு குடியரசு விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் தேசிய கொடியை ஏற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவினை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.