முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பாற்கடல் ஆக்கிரமிப்பு முழுவதையும் மீட்க இந்து ஆலய பாதுகாப்புக்குழு கோரிக்கை

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தச தீர்த்தங்களில் ஒன்றான வேங்கான்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பாற்கடல் தீர்த்த குளம் ஆக்கிரமிப்பு முழுவதையும் மீட்டுத் தர வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர்  மு.செங்குட்டுவன் சிதம்பரம் உதவிஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தச தீர்த்தங்களில் ஒன்றான வேங்கான்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பாற்கடல் தீர்த்த குளம் ஆக்கிரமிப்பு முழுவதையும் மீட்டுத் தர வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர்  மு.செங்குட்டுவன் சிதம்பரம் உதவிஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மனுவிபரம்: சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியதுதான் திருப்பாற்கடல் குளம். இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போனது. கடந்த 2-10-2013ல் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் ஒரு பகுதி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பகுதி சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

திருப்பாற்கடல் குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ள அம்பலத்தாடி மடத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் முற்றிலும் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவ்விடத்தின் ஒருபகுதியில் நல்லமுறையில் தனியார் பள்ளி சேவை நடைபெறுகிறது.

Advertisement

ஆனால் திருப்பாற்கடல் குளம் இறைவனால் உருவாக்கப்பட்டது. எனவே பக்தர்களுக்காக திருப்பாற்கடல் தீர்த்த குளத்தை முற்றிலுமாக மீட்டு தர வேண்டும் என மு.செங்குட்டுவன் மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments