மதுரை மாவட்டம் மணிநகரம் பகுதியில் இயங்கி வரும் மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளியின் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்தனர்.
அவர்களில் பலத்த காயமடைந்து 15 குழந்தைகள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மணிநகரம் பகுதியில் இயங்கி வரும் மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியின் பேருந்து இன்று காலை வாடிப்பட்டி, தனிச்செயம் பகுதியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு, புதூரில் உள்ள பள்ளிக் குழந்தைகளை ஏற்றுவதற்காக வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த நகரப் பேருந்து மீது மோதாமல் இருக்க பேருந்தை வளைத்த போது அது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து நடந்த போது பேருந்தில் 60 குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த 15 குழந்தைகள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
அதிக வேகம், பேருந்து கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தது, சரியாக பராமரிக்கப்படாதது, பேருந்தில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்தது போன்ற பல காரணங்கள் இந்த விபத்துக்குக் காரணம் என கூறி பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்தினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்த அரசு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டோர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.