தற்போதைய செய்திகள்

தண்ணீர்குழியில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள நொச்சியோடைப்பட்டியைச் சேர்ந்தவர் நாட்ராயண். இவரது மனைவி கமலா(24). இவர்களது மகன் தமிழ்செல்வன்(2). கேரள

ஆ. நங்கையார் மணி

சாணார்பட்டி அருகே தண்ணீர்குழியில் மூழ்கிய 2 வயது குழந்தை உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள நொச்சியோடைப்பட்டியைச் சேர்ந்தவர் நாட்ராயண். இவரது மனைவி கமலா(24). இவர்களது மகன் தமிழ்செல்வன்(2). கேரள மாநிலத்தில் உள்ள எஸ்டேட்டில், நாட்ராயண் கூலி வேலை செய்து வருகிறார். நொச்சியோடைப்பட்டி வீட்டில், கமலா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கமலா, புதன்கிழமை வீட்டில் படுத்திருந்தபோது, குழந்தை தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அந்த வீட்டின் அருகே குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறுகுழியில், தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தமிழ்செல்வன், அந்த குழியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே, குழந்தை பரிதாபமாக உயிரிழந்து.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT