வேப்பந்தட்டை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 2,500 கோழிகள் நாசம்
வேப்பந்தட்டை அருகே தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த சிவசாமி மகன் ஜெய்சங்கர் (33). பொறியியல் பட்டதாரியான இவர், தமிழக அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தொண்டப்பாடி- நெய்குப்பை சாலையில்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கோழிப் பண்ணையில் இருந்த 2,500 கோழிகள், கொட்டகை எரிந்து நாசமானது.
வேப்பந்தட்டை அருகே தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த சிவசாமி மகன் ஜெய்சங்கர் (33). பொறியியல் பட்டதாரியான இவர், தமிழக அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தொண்டப்பாடி- நெய்குப்பை சாலையில் அவருக்கு சொந்தமான வயலில் கோழிப்பண்ணை அமைத்து, அதில் 2500 கோழி மற்றும் குஞ்சுகள் வளர்த்து வந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் கோழிப்பண்ணை அருகே உள்ள வயலில் காய்ந்த செடிகளை அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தீ வைத்து கொளுத்திய போது, கோழிப் பண்ணையின் கொட்டகையில் தீ பரவியது. தொடர்ந்து, கோழிப்பண்ணை முழுவதும் தீ பரவியதில், அங்கிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2,500 கோழிகளும், ரூ. 4 லட்சம் மதிப்பிலான தடவாளப் பொருள்கள் மற்றும் கொட்டைகை எரிந்து சாம்பலானது.
தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு சென்று தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய், காவல் துறையினர் மற்றும் வங்கியாளர்கள் ஆகியோர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். இதுகுறித்து ஜெய்சங்கர் அளித்த புகாரின்பேரில், வி.களத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.