ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையோர வீட்டிற்குள் சனிக்கிழமை லாரி புகுந்த விபத்தில் மூதாட்டி இறந்தார். 4 பெண்கள் காயமடைந்தனர்.
வாணியம்பாடியிலிருந்து வேலூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோர வீட்டிற்குள் புகுந்துள்ளது. அதில் அந்த வீட்டிற்கு வெளியே அமர்ந்து பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த தாயம்மாள் (50) படுகாயமடைந்தார். மேலும் அங்கே அமர்ந்திருந்த அவரது உறவினர்கள் பாலாமணி (32), லட்சுமி (28), பக்கத்து வீட்டை சேர்ந்த ராசாத்தி (38), நிரோஷா (23) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தாயம்மாள் இறந்தார். லட்சுமி மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாலாஜாபேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் சிவஞானத்தை (32) ஆம்பூர் டவுன் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.