திமுக நகர்மன்ற உறுப்பினர் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்
பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் பள்ளிவாசல் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் மயில்சாமி மனைவி தீபா (35). அதிமுகவை சேர்ந்த இவர், பெரம்பலூர் நகராட்சியின் 8-வது வார்டு
பெரம்பலூர் நகர்மன்ற திமுக உறுப்பினர் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளியை, பெரம்பலூர் போலீஸார் குற்றவியல் நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர்.
பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் பள்ளிவாசல் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் மயில்சாமி மனைவி தீபா (35). அதிமுகவை சேர்ந்த இவர், பெரம்பலூர் நகராட்சியின் 8-வது வார்டு உறுப்பினராக இருந்தார். பெரம்பலூர் வெங்கடேசபுரம் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் அன்புமுத்து (37). திமுகவை சேர்ந்த இவர், பெரம்பலூர் நகராட்சியின் 11-வது வார்டு உறுப்பினராக இருந்தார்.
இந்நிலையில் தீபாவுக்கும், அன்புமுத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த கணவர் மயில்சாமி, தீபாவை கண்டித்தும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்ததாக தெரிகிறது. இதனிடையே, கடந்த 15ம் தேதி தீபாவின் வீட்டிலிருந்த அன்புமுத்துவை, தீபாவின் கணவர் மயில்சாமி வெட்டி கொலை செய்தார். அன்றைய தினமே தீபாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தீபாவின் தாய் பிரேமா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்தார்.
தலைமறைவாக இருந்த மயில்சாமி, கடந்த 18ம் தேதி நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, பெரம்பலூர் போலீஸார் திங்கள்கிழமை மாலை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மயில்சாமியை ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நடுவர் சுரேஷ், பெரம்பலூர் போலீஸார் 2 நாள் காவலில் மயில்சாமியை விசாரிக்க அனுமதித்ததுடன், ஜூலை 23ம் தேதி மாலை 4.20 மணிக்கு மயில்சாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.