முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவரை கடத்திய சம்பவத்தில் 5 பேர் கைது

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வம்(48) கடந்த ஜூலை-14ஆம் தேதி கடத்தப்பட்ட வழக்கில் அவரை கடத்திய 5 பேர் அடங்கிய கடத்தல் கும்பலை கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகர்

தற்போதைய செய்திகள்

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவரை கடத்திய சம்பவத்தில் 5 பேர் கைது

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வம்(48) கடந்த ஜூலை-14ஆம் தேதி கடத்தப்பட்ட வழக்கில் அவரை கடத்திய 5 பேர் அடங்கிய கடத்தல் கும்பலை கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:58 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வம்(48) கடந்த ஜூலை-14ஆம் தேதி கடத்தப்பட்ட வழக்கில் அவரை கடத்திய 5 பேர் அடங்கிய கடத்தல் கும்பலை கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான தனிப்படையினர் பிடித்து வியாழக்கிழமை கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் செல்வம். ஆட்டோ ஓட்டுநர். இவரிடம் கடந்த ஜூலை-14ஆம் தேதி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி ஒருவர் சவாரி ஏறியுள்ளார்.சிப்காட் அருகே சென்றபோது அங்கு ஒரு காரில் வந்த 5 பேர், தங்களை போலீஸார் எனக் கூறியுள்ளர். மேலும் விசாரணைக்காக அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி, ஆட்டோ ஓட்டுநர் செல்வத்தை காரில் கூட்டிச் சென்றனர். அப்போது சவாரி ஏறிய நபர், ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார்.காரில் திருவள்ளூரை தாண்டியதும் செல்வத்தை கண்ணை கட்டிய அந்த கும்பல் மர்ம அறையில் அவரை அடைத்தனர். இந்நிலையில் செல்வம் காணாமல் போனது குறித்து அவரது மனைவி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து அவரை திருவள்ளூரில் உள்ள அறையில் பூட்டிவைத்து அவரது மனைவி தர்மாவதியிடம்  15 லட்ச ரூபாயில் பேரம் ஆரம்பித்து ரூ.1 லட்சம் கொடுத்தால் உன் கணவரை விட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும் 14ஆம் தேதி இரவு துவங்கி 17ஆம் தேதி இரவு வரை செல்வத்தை 7 பேர் அடங்கிய கும்பல் உருட்டை கட்டையால் அடித்தும் மிதித்தும் சிகரெட்டால் அவரது உடலை சுட்டும் காயப்படுத்தியுள்ளனர். இந்த கும்பலின் தாக்குதலில் செல்வத்தின் மேற்பல் உடைந்தது.

இந்நிலையில் மர்ம கும்பல் கேட்டுக் கொண்டதற்கிணங்க 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த ஜூலை.17ஆம் தேதி ஆவடி சென்ற தர்மாவதி அவரது மகள் மஞ்சுளா ஆகியோருடன் போலீஸார் மாறு வேடத்தில் இருப்பதை அறிந்து போலீஸார் எங்கே தங்களை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மர்ம கும்பல் செல்வத்தை கடந்த 17ஆம் தேதி இரவு செங்குன்றம் அருகே பாடியநல்லூரில்  இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் செல்வத்தை கடத்திய மர்ம கும்பலை பிடிக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீஸார் பல குழுக்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த மர்ம கும்பல் செல்வத்தை செல்போனை திருடி வேறு சிம்கார்டை போட்டு பேசி வந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் அந்த மர்ம கும்பலை பிடித்தனர்.

இதில் இந்த மர்ம கும்பலின் தலைவனாக கருதப்பட்ட சென்னை குன்றத்தூரை சேர்ந்த ஜகதீஷ்குமார் மகன் நந்தகுமார் என்கிற குருராஜி(32), காஜா மொய்தீன் மகன் அப்துல் ரகுமான்(27), குரோம்பேட்டையை சேர்ந்த ரங்கநாதன் மகன் ராஜா(46), குன்றத்தூர் வசந்தகுமார் மகன் அருண்குமார்(27), பெரிய கொடுங்கையூர் வேம்புலி மகன் சோமசுந்தரம்(27) ஆகிய 5 பேரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து செல்வத்தின் கடத்தப்பட்ட ஆட்டோ, இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தி சுமோ கார், 2 பைக்குகள், செல்வத்திடம் இவர்கள் பறித்த 2 சவரன் மோதிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நந்தகுமார் ஏற்கெனவே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் இருந்தவர் என்றும், இவர் ஏற்கெனவே சென்னையில் சிவதாஸ் என்ற இலங்கை அகதியை கடத்திய வழக்கில் யானை  கவுனி காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டவர் என்றும் இவரது தலைமையில் 7 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை கடத்தியதும், இவர்கள் இது போல ஆட்களை போலீஸார் வேடத்தில் விசாரணைக்கு அழைக்கிறோம் என சொல்லி கடத்தியது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கும்பலிடம் போலீஸார் அணியும் ஆடையும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து 5 பேரையும் சிப்காட் போலீஸார் கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாகி உள்ள இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →