முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் கோயிலில் உழவாரப் பணிகள்

திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் ஓருநாள் உழவாரப்பணி மற்றும் மரம் நடுதல் விழா இன்று நடைபெற்றது.

Updated On : 25 ஜூலை, 2014 at 2:09 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:28 AM

திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் ஓருநாள் உழவாரப்பணி மற்றும் மரம் நடுதல் விழா இன்று நடைபெற்றது.

இதில் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.யோகரம்யா விழாவை தொடங்கி வைத்து பேசியது: இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் மூன்றாம் ஆண்டாக கல்லூரியை சேர்ந்த மாணவிகள் திருவிழாக்காலங்களில் தூய்மைப்படுத்தி வருகின்றோம். நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஓவ்வொரு ஆண்டும் எதாவது ஒரு கிராமத்தில் ஏழு நாட்கள் முகாம் நடத்துவோம். ஆனால் அந்த திருப்தியை விட கோவிலில் ஒரு நாள் தூய்மை செய்தோம் என்றால் தான் மனநிறைவு ஏற்படும். இப்போதுள்ள காலக்கட்டத்தில் அலைபேசி, இணையதளம், போன்ற  எண்ணற்ற கண்டுப்பிடிப்புகள் அதிகரித்துவிட்டததால் மனித சமுதாயம் தங்களை அதற்காகவே அற்பணித்து விட்டது.

இதனால் பழங்கால வரலாறு என்பதை அதிகமாக நினைத்து பார்ப்பது இல்லை. அதற்காகவே மாணவிகள் பலரும் சேர்ந்து தமிழகத்தின் வரலாற்றுகளை முழவதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற கோவில் பணிகளை மேற்கொள்கிறோம்; என்றார்.

Advertisement

நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் ரெ.ஆறுமுகம் பேசுகையில், வருகின்ற செவ்வாய்க்கிழமை இக்கோவிலில் ஆடிப் பூரத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாகவே மகளிர் அனைவரும் இங்குள்ள சாமி சன்னதி, உள், வெளி வளாகம், கொடிமரம், நவக்கிர நுழைவாயில் இடங்களை தூய்மைப்படுத்தி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கோலங்கள் இட்டு கோவிலை தன்னுடைய வீடுகள் போல் நினைத்து பணி மேற்கொண்டு இருக்கின்றனர் என்றார்.

 விழாவில் திருவரங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் அ.கருப்பையா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நா.பூர்ணிமா, தமிழ்த்துறை தலைவர் பி.பத்மாவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.