சிதம்பரத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு: 1537 பேர் பங்கேற்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வில் 1537 பேர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வில் 1537 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
பொதுப்பணித் துறையில் சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரிவில் உதவி பொறியாளர்கள், தொழிற்சாலைகள் பாதுகாப்பு உதவி இயக்குநர் உள்பட மொத்தம் 98 உதவிப் பொறியாளர் அளவிலான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத் தேர்வில் பங்கேற்க கடலூர் மாவட்டத்தில் தேர்வெழுத 2447 பேருக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 மையங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நடைபெற்றது. காலையில் நடைபெற்ற விருப்பப் பாடத்தேர்வில் 1537 பேரும், பிற்பகல் நடைபெற்ற பொதுப்பாடப்பிரிவிற்கான தேர்வில் 1511 பங்கேற்று தேர்வெழுதினர். தேர்வினை சிதம்பரம் வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி, கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.தங்கவேலு ஆகியோர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.