முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பலத்த இடி, மின்னலுடன் மழை: மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி

சிதம்பரம் பகுதியில் சனிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் வல்லம்படுகை பாரதிதாசன் தெருவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் பின்புறம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

சிதம்பரம் வட்டத்தில் சனிக்கிழமை இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி சிதம்பரம் அருகே 3 பசுபாடுகள் இறந்த போயின.

சிதம்பரம் பகுதியில் சனிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் வல்லம்படுகை பாரதிதாசன் தெருவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையின் மீது இடி, மின்னல் தாக்கியது. இதில் கொட்டகையின் கட்டிப்போடப்பட்டிருந்த 3 பசுமாடுகளும் மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தன. இறந்து போன மாடுகளின் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.