சிதம்பரத்தில் ஆகஸ்டு 2,3 தேதிகளில் சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழா
சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழா சிதம்பரம் கீழவீதி ராசி மண்டபத்தில் ஆகஸ்டு 2,3 தேதிகளில் இருநாட்களுக்கு மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஆகஸ்டு 2-ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் முதல்நாள்
சிதம்பரத்தில் தமிழ்ப் பேரவை சார்பில் தெய்வச் சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழா ஆகஸ்டு 2,3 தேதிகளில் நடைபெறுகிறது.
சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழா சிதம்பரம் கீழ வீதி ராசி மண்டபத்தில் ஆகஸ்டு 2,3 தேதிகளில் இரு நாட்களுக்கு மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஆகஸ்டு 2-ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் முதல் நாள் விழாவிற்கு கயிலைச்செல்வர் ரத்தின.ராமநாதன் தலைமை வகிக்கிறார். எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை, டிஎஸ்ஜி வெங்கடாசலபதி செட்டியார், வ.சு.ப.மா.பூங்குன்றன், ச.மெ.மீனாட்சிசோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஆதி.சிவராமவீரப்பன் வரவேற்கிறார். திருத்தணி என்.சுவாமிநாதன் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் திருச்சி சிவா எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், பேராசிரியர் தி.மு.அப்துல்காதர், பேராசிரியர் மு.சிவச்சந்திரன், முனைவர் ரா.அன்பழகன், புலவர் தி.பொன்னம்பலம், புலவர் பனசைமூர்த்தி ஆகியோர் பங்கேற்கும் கருத்தரங்கம், சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சித்தாந்த புலவர் கோவி.சுந்தரவதனம் நன்றி கூறுகிறார்.
ஆகஸ்டு 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் விழாவிற்கு அணி வணிகர் பா.பழநி தலைமை வகிக்கிறார். வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், மூசா, பா.பழநி, சி.ரா.லக்குமிகாந்தனார், பேராசிரியர் ஐ.ஆனந்த நடராஜ தீட்சிதர், உ.ரா.உமாநாத தீட்சிதர், பேராசிரியர் த.அகரமுதல்வன், தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. நிறைவுவிழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று "தீதும், நன்றும் பிறர் தர வாரா" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை தமிழ்ப் பேரவைத் தலைவர் கவிஞர் ராம.ஆதிமூலம் செய்துள்ளார்.