மருத்துவ காப்பீடு திட்டத்தில் தைராய்டு நோய் சிகிச்சையை சேர்க்க மார்க்சிஸ்ட் கம்யூ கோரிக்கை
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் தைராய்டு நோய் சிகிக்ச்சையை சேர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் தைராய்டு நோய் சிகிக்ச்சையை சேர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
கடித விபரம்:
தமிழகத்தில் 60 சதவீத பெண்களுக்கு ஹைபர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு நோய்கள் தாக்கி பெரும் பாதிப்புள்ளாகியுள்னர். இதில் ஹைப்போ தைராய்டு நோய் என்பது உடல்பருமன் ஏற்படும். இதற்கு தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிட்டு வந்தால் குணமளிக்கும். ஆனால் ஹைபர் தைராய்டு நோய் என்பது கழுத்து, தொண்டையில் ஏற்பட்டு முகத்தை பல்வேறு சீரழிவுகலை ஏற்படுத்துவதுடன், தலைமை வழுக்கையாக்கி, கண்களை வெளியே தள்ளி, உடலை மெளிதாக்கி கோரமான தோற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோய் வரை கொண்டு செல்லும். இதற்கு மாத்திரைகள் சாப்பிடுவதோடு, அறுவை சிகிச்சை மிகவும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோயக்கான சிகிச்சை மேற்கொள்ள சென்ற போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இடம்பெறவில்லை. அரசு பொது மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கின்றனர். எனவே தமிழக பெண்களை அச்சுறுத்தி வரும் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு நோய்களுக்கும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என உத்தரவு பிறப்பித்து பெண்கள் நலம் காத்திட வேண்டும் என ஆர்.ராமச்சந்திரன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.