சிதம்பரத்தில் தலைமைக்காவலர் மீது தாக்குதல்
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தலைமைக்காவலர் சிவக்கொழுந்து ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு முத்தையாநகர் பாலம் அருகே வாகன
சிதம்பரம் அண்ணாமலைநகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தலைமைக்காவலர் தாக்கப்பட்டு காயமுற்றார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தலைமைக்காவலர் சிவக்கொழுந்து ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு முத்தையாநகர் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த உசூப்பூரைச் சேர்ந்த கெளதம் (23) என்ற வாலிபரை நிறுத்தி வாகன உரிமம், காப்பீடு சான்றுகளை கேட்டனர். அப்போது அவ்வாலிபர் வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல முயன்ற போது, அவரை தடுத்த தலைமைக்காவலர் சிவக்கொழுந்துவை தாக்கியுள்ளார். இதில் தலைமைக்காவலர் சிவக்கொழுந்துவின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வாலிபர் கெளதமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.