முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில் காந்திய சிந்தனை தொடர் வகுப்புகளை நடத்த, காந்திமன்றம் முடிவு

சிதம்பரம் வாகீசநகரில் உள்ள காந்திமன்ற பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்றச் செயலாளர் பொன்.குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். மன்ற உறுப்பினர் வி.எஸ்.ஆர்.நடராஜன் முன்னிலை

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

சிதம்பரம் வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காந்திய சிந்தனை குறித்த தொடர் வகுப்புகளை நடத்துவது என சிதம்பரம் காந்திமன்றம் முடிவு செய்துள்ளது.

சிதம்பரம் வாகீசநகரில் உள்ள காந்திமன்ற பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்றச் செயலாளர் பொன்.குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். மன்ற உறுப்பினர் வி.எஸ்.ஆர்.நடராஜன் முன்னிலை வகித்தார். பெரி.முருகப்பன் வரவேற்றார். நா.சின்னதுரை நன்றி கூறினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள்: தலைவர்- பொன்.குஞ்சிதபாதம், செயலாளர்- முனைவர் மு.ஞானம் (மைசூர் ஹிந்தி இன்ஸ்டியூடர் முன்னாள் மண்டல இயக்குநர்), பொருளாளர் - எஸ்.சிவராமசேது, செயற்குழு உறுப்பினர்கள்- டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.கே.சிவக்குமார், கே.சேதுமாதவன், சி.ஏகாம்பரம், நா.சின்னதுரை.

தீர்மானங்கள்: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே காந்திய சிந்தனை குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, 2016-ம் ஆண்டு காந்திமன்ற வரை விழாவை சிறப்பாக நடத்துவது, குளிர்காலங்களில் காந்திமன்றத்தில் மருத்துவ முகாமை நடத்துவது, காந்தி ஜெயந்தி அன்று சர்வசமய பிரார்த்தனை நடத்துவது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.